ஐயமும் தெளிவும்
ஐயம் -
அவ்லியாக்களிடம் வஸீலா தேடலாம் எனப் பலர் கூறுகின்றனர் தங்களது கருத்து யாது? விளக்கம் தாருங்கள்.
தெளிவு -
அவ்லியாக்களிடம் வஸீலா தேடலாம் என்று கூறுவது மிகச் சரியானது. ஹதீஸ்களில் மிகத் தெளிவான ஆதாரங்கள் இதற்குண்டு. வஸீலா கூடாது என்போர் ஹதீஸ்களைப் பற்றி தெரியாத அப்பாவிகள் அல்லது தெரிந்தும் - தாம் கொண்ட தவறான கொள்கையை நிலைநிறுத்த பாடுபடும் வேஷதாரிகள் இவ்வாறான கபட வேஷதாரிகளின் முகமூடிகளை நம் முன்னோர்களான கண்ணியத்திற்குரிய இமாம்கள் கிழித்தெறிந்துள்ளனர்.
வஸீலா ஆகுமானதே என்பதற்கான ஆதாரங்களை எழுதுவதனால் பெரும் நூலே எழுதலாம். இங்கே மிகச் சுருக்கமான தெளிவுகளை தங்களுக்குத் தருகிறோம்.
உங்களில் யாருடைய பொருளாவது திருட்டுப்போய்விட்டால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் மற்றுமொரு அறிவிப்பில் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லவும். என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நபிமொழி தப்ரானி, பைஹகி ஆகிய ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளது.
ஆதாரம் : ஹிஸ்னுல் ஹஸீன் பக்கம் - 203
இந்த நபிமொழிக்கு வஹ்ஹாபிகள் மதித்துப்போற்றும் ஷவ்கானி தனது துஹ்பத்தாகீரீன் (பக்கம் - 182) என்ற நூலில் மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் நல்லடியார்களான மலக்குகள், ஸாலிஹான ஜின்கள் போன்றவர்களிடம் உதவி தேடுவதற்கு இந்த நபிமொழியில் ஆதாரமிருக்கிறது. என்று எழுதுகிறார்.
வஸீலா ஆகும் என்பதற்கு நாம் ஆதாரங்கள் எடுத்து வைப்பது ஒரு புறமிருக்கட்டும் வஹ்ஹாபிகளின் அறிஞரே, கூடாது என்று சொல்லும் தனது குழாத்தின் மரமண்டையில் இவ்விளக்கத்தின் மூலம் ஓங்கித் தட்டுவதைச் சற்று கவனியுங்கள்.
நபிமார்கள், வலிமார்கள் ஆகியோரைப் பற்றிப் பிடித்த ஒவ்வொருவரிடமும் அவர்கள் வருவார்கள், கஷ்டங்கள், துன்பங்கள் வரும்போது காப்பாற்றுவார்கள்.
நூல் : மீஸானுல் குப்ரா
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உயிரோடு இருக்கும்போதும் சரி! மரணித்த பின்னரும் சரி! அதே போன்று நபிமார்கள் வலிமார்கள் ஆகியோர் உயிரோடிருக்கும் போதும் சரி, மறைந்த பின்னரும் சரி அவர்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை.
நூல் : அர்றத்துல் முஹ்கமுல் மனீஃ, பக்கம் - 86, 87
எனவே மேற்படி ஆதாரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது அவ்லியாக்களிடம் நேரிடையாக வஸீலா தேடலாம் எனத் தெளிவாகின்றது. இது நேர்வழிகாட்டும் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் சீரிய வழித்தடமாகும். மற்றவை வழிகேட்டிற்கு வழிகாட்டும் போலிப்பாதைகள் என்பதை புரிந்துக் கொள்ளவும் வேண்டும்.
நன்றி - வஸீலா 1987. 07. 15
Comments
Post a Comment