*இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி*!
*இமாம்*திர்மிதி*ரஹ்மத்துல்லாஹி அலைஹி*! கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சிறந்த ஆபிதாகவும், துறவியாகவும், நிகரற்ற ஹதீஸ் துறையில் ஹாபிழாகவும் விளங்கினார்கள். மிகச்சிறந்த ஆலிமான இவர்கள் அபார நினைவாற்றல் மிக்கவராகவும் விளங்கியுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்களின் கடினமான வணக்க வழிபாட்டினால் அவர்களின் இறுதிக் காலத்தில் கண்பார்வையை இழந்துள்ளார்கள் என்று ஹளரத் யூஸுப் பின் அஹ்மத் பக்தாதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவார். ஒரு தினம் இஇமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹிமாம் புகாரி அவர்கள் இமாம் திர்மிதியைப் பார்த்து, என்னிடமிருந்து நீங்கள் பெற்ற பயனைவிட, உங்களிடமிருந்து யான் பெற்ற பயன் அதிகம் என்று குறிப்பிட்டார்கள். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வபாத்தான பின் குறாசான் வாசிகள் அறிவு, அமல் இரண்டிலும் இவர்களையே பின்பற்றினர் என்று இம்ரான் பின் அலான் என்பவர் கூறுகின்றார். ஆதாரம் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் - 01, பக்கம் - 388 இம...