ஐயமும் தெளிவும்
ஐயமும் தெளிவும்
ஐயம் : சிறுநீர் கழித்துவிட்டு உறிஞ்சும் பேப்பரினால் சுத்தம் செய்தால் கூடுமா?
தெளிவு : காகிதத்தினால் சுத்தம் செய்தால், சுத்தமாகாது. வலா யஸ்தன்ஜி பிகாஙிதின் வஇன் கானத் பைளா அ - சிறுநீர் கழித்துவிட்டு காகிதத்தால் சுத்தம் செய்தல் கூடாது. காகிதம் வெண்மையானதாக இருப்பினும் சரியே!
பதாவா ஆலம் கீரி, பாகம் - 01, பக்கம் - 51
காகிதம் மரியாதைக்குரிய பொருள். மரியாதைக்குரிய பொருளினால் சிறுநீரை சுத்தம் செய்தல் கூடாது.(ரத்துல் முக்தார்)
ஐயம் : பொது மையவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா?
தெளிவு : பொது மையவாடியில் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது ஹறாம். அது பள்ளிவாசலாயினும் சரியே! அதிகாரம் பெற்றோர் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து விடவேண்டும்.
மின்ஹாஜ், பாகம் - 01, பக்கம் - 364
முங்னி, பாகம் - 01, பக்கம் - 364
பதாவா நவவி, பக்கம் - 46
Comments
Post a Comment