*கஸ்தூரி மணம்* *கமழும்* *நாயகத்தின்* *திருமேனி!*
நாயகத் திருமேனி.
கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில் ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி
நாயகத்திருமேனி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்பொழுதும் பரிசுத்தமாகவும், நறுமணங்கமழ்பவராகவும் இருப்பார்கள். அவர்களின் திரு மேனியில் அழுக்கோ, துர்வாடையோ இருக்காது. அதனால், அவர்களின் திருவுடலை நெருங்குவதில்லை.
�சுத்தம் ஈமானின் பாதி� என்றும், இஸ்லாம் மார்க்கம் தூய்மையில்தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும், நபியவர்கள் கூறி சுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுதியுள்ளார்கள்.
அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகத்திற்கு விஷேடமாக பணிவிடை செய்யும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் நபிகள் நாயகத்தின் திருவுடலின் சிறப்பம்சத்தை அனுபவத்தின் வாயிலாக இப்படிக் கூறுகின்றார்.
நான் முகர்ந்த ஹம்பர், கஸ்தூரி மற்றும் வாசனைத் திரவியங்கள் எதுவும் நபிகள் கோமான் றஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிலிருந்து வீசுகின்ற மணத்திற்கு இணையாகாது.
ஹஜரத் ஜாபிர் இப்னு ஸம்றா றழியல்லாஹு அன்ஹு தனது அனுபவத்தை இப்படி விபரிக்கின்றார்கள். �ஒரு தினம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது முபாறக்கான திருக்கரத்தால் என்கன்னத்தைத் தடவினார்கள், அவர்களின் மணிக்கரத்திலிருந்து குளிர்ச்சியையும், சுகந்த வாடையையும் உணர்ந்து நுகர்ந்தேன். அன்னார் அத்தர் பெட்டிக்குள் கைவிட்டு எடுத்தது போன்றிருந்தது அவர்களிலிருந்து வீசிய நறுமணம்.
ஆதாரம் : அஷ்ஷிபா, பாகம் - 01, பக்கம் - 78
அல்லாமா கபாஜி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், யாருடனாவது மஹ்மூது நபியவர்கள் முஸாபஹாச் செய்தால் ஒரு சிறுபிள்ளையின் தலையை தடவினால் அதன் பறக்கத்தால் அப்பிள்ளை ஏனைய பிள்ளைகளைவிட தனித்துவமிக்கதாக விளங்கும்.
ஒரு தினம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லம் வந்து ஓய்வெடுத்தார்கள். அன்னார் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு அதிகமாக வியர்ப்பதுண்டு.
அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் உடனே ஒரு போத்தலை கொண்டுவந்து வியர்வைகளைச் சேர்த்து போத்தலில் அடைத்தார்கள். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண் விழித்துப் பார்த்தபோது நீங்கள் செய்வது என்ன? என்று கேட்க அதற்கு அல்லாஹ்வின் திருத்தூதரே! தங்களின் புனித வியர்வைத்துளிகளை எனது வாசனைத்திரவியத்தில் கலப்பதற்காக சேகரிக்கின்றேன். அதனால் எனது வாசனைத்திரவியம் அனைத்து வாசனைகளிலும் உயர்ந்து காணப்படும் என்று கூறினார்கள்.
இமாம் புஹாரி றஹ்மத்துல்லாஹி அலை அவர்கள் தங்களது �தாரிகுல்கபீர்� என்ற நூலில் ஹஜரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு மூலம் றிவாயத் செய்கின்றார்கள்.
�தாஹா நபியவர்கள் ஏதாவது தெருவால் நடந்து சென்றால் அத்தெரு பூராகவும் மணம் கமழும், அதன் மூலம் இத்தெருவால் நாயகத்திருமேனியவர்கள் கடந்து சென்றுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.
நாயகத்திருமேனியவர்கள் புனித திருவுடல்களிலிருந்து எப்பொழுதும் நறுமணம் கமழ்து கொண்டேயிருக்கும். அவர்களின் புனித உடலிலிருந்து இயற்கையாகவேதான் இம்மணம் கமழும்.
ஹஜரத் அலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள், நபிகள் நாயகத்தின் வபாத்திற்குப் பின் அவர்களின் திருவுடலை குளிப்பாட்டினேன். அப்போது அத்திருவுடலில் அழுக்கோ, நஜீஸ் அசுத்தமோ கிஞ்சித்தும் காணப்படவில்லை. பொதுவாக ஒரு மைய்யத் வெற்றுடலில் காணப்படுகின்ற எதுவித அடையாளமும் அன்னாரில் காணமுடியவில்லை. வேந்தர் நபியவர்களின் வெற்றுடலைக் கண்ட நான் அதன் பரிசுத்த நிலை கண்டு வியந்து போனேன்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! தாங்கள் உயிருடன் வாழும் போதும் சரி வபாத்திற்குப் பின்பும் சரி மணமிக்கவர்களாகவே உள்ளீர்கள் என்று எனது நா உச்சரித்தது.
மேலும் அலிரலியல்லாஹு அன்ஹு கூறும் போது �அன்னாரை குளிப்பாட்டும் போது அன்னாரின் திருவுடலில் இருந்து வார்த்தையால் வர்ணிக்க முடியாத நறுமணம் கமழ்ந்தது. அதுபோன்றே ஒரு மணத்தை எங்கும் நான் நுகர்ந்ததில்லை.
உஹது யுத்தத்தில் தலைக்கவசத்தின் ஆணி நெற்றியில் பதிந்திருந்தது. ஹஜரத் மாலிக் இப்னு ஸினான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது பல்லின் உதவியால் அவ்வாணியை வெளியில் எடுத்தார்கள். இதனால் ஏற்பட்ட காயத்திலிருந்து குருதி வெளிப்பட்டது. ஹஜரத் மாலிக் இப்னு ஸினான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது நாவினால் அக்குருதியை தடவி உறுஞ்சினார்கள். குருதி அசுத்தம் உடனே வெளியில் துப்பி விடுமாறு கோமான் நபியவர்கள் கூறுவில்லை மாறாக �உம்மை ஒருபோதும் நரகம் தீண்டாது� என்று சுப செய்தி கூறினார்கள்.
ஆதாரம் : அஷ்ஷிபா பாகம் - 1, பக்கம் - 89
ஒரு தினம் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் குருதி குத்தி எடுத்தார்கள். எடுக்கப்பட்ட குருதி ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அவர்களை அழைத்து குருதியை எடுத்துச் சென்று அசுத்தமில்லாத இடத்தில் கொட்டி விடுமாறு பணித்தார்கள்.
குருதியை எடுத்துச் சென்ற இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அக்கம் பக்கம் எல்லாம் பார்த்தார்கள். கோமான் நபியின் குகுருதியைக் கொட்டுவதற்கு பொருத்தமான எந்த ஒரு இடமும் இவருக்கு தென்படவில்லை. சிறிது நேரம் சிந்தித்தார் ஒரு முடிவுக்கு வந்தார். தனது மணி வயிற்றை விட பொருத்தமான இடம் எங்கும் கிடையாது என்று முடிவு செய்து அத்தனையையும் குடித்து விட்டார்.
இதனை அறிந்த அண்ணலார் கோபப்படவில்லை. சுடுமொழி பகரவில்லை. குருதி உண்பது ஹறாம் பாவத்தை ஏன் செய்தீர்கள் என்று பகரவில்லை. மறாக எனது குருதியை உமது குருதியில் கலந்ததனால் உம்மில் வியக்கத்தக்க வீரம் பிறக்கும். உம்மோடு சமர் செய்பவர் மரணத்தையே தழுவுவார் என்று நபியவர்கள் கூறினார்கள். உம்மோடு சண்டை போடுவோர் எவரும் உம்மால் அழிவையே சந்திப்பர். அவர்களாலேயே உமக்கு அழிவும் ஏற்படும் என்றும் கூறினார்கள்.
அதில் துர்வாடையும் இல்லை. மாறாக சுத்தமும், மணமும் ஆகும். இல்லையெனில் நபியவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திருப்பார்கள். அவ்வாறு செய்யவில்லை. பதிலுக்கு நற்செய்தி கூறினார்கள்.
ஓர் இரவு நபியவர்கள் ஒரு பாத்தித்தில் சிறுநீர் கழித்து வைத்திருந்தார்கள். பறக்கா என்ற ஸஹாபிப் பெண்மணி அதனை எடுத்துக் குடித்து விட்டார்கள். இச்செயல் கண்டு செம்மல் நபியவர்கள் சினம் கொள்ளவில்லை. இப்படியான வேலைகளை இதன்பின் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கவுமில்லை.இச்செய்தியை இமாம் புகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது சஹிஹில் பதிவு செய்துள்ளார்கள்.
பறக்கா என்ற பெண் நபியவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். அவர் கூறினார், நபியவர்களிடம் மரத்திலான ஒரு பாத்திரம் இருந்தது. அதனை தங்களது கட்டிலுக்குக் கீழே வைத்திருப்பார்கள்.இரவில் சிறுநீர் கழிப்பதற்கு தேவைப்பட்டால் அதில் கழிப்பார்கள்.
ஒரு தினம் ஸுப்ஹுக்கு எழுந்து பார்த்தபோது பாத்திரம் வெறுமையாகக் காணப்பட்டது. பறக்காவை அழைத்து சிறுநீரை என்ன செய்தீர்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! இரவு கண்விழித்தேன் கடுமையாக தாகமாக இருந்தது. இந்தப் பாத்திரத்திலிருந்ததை பருகிவிட்டேன். அதிலிருப்பது தங்களின் சிறுநீர்தான் என்பது எனக்குத் தெரியவில்லை என்றதும் உமது வயிற்றில் எதுவித வலியும் வராது என்று நற்செய்தி கூறினார்கள்.
ஒருவர் தூங்கினால் அவரது வுழு முறிந்துவிடும். ஆனால், ஜோதி நபியவர்கள் வுழு செய்து கொண்டுதான் உறங்குவார்கள். தூங்கத்தில் குறட்டைவிடும் சத்தம் கேட்கும், ஆனால் தூங்கி எழுந்தபின் வுழுச் செய்யாமல் தொழுவார்கள். ஒருவர் விளக்கம் கேட்டார். நபியவர்கள் பகர்ந்தார்கள். �என் கண் தூங்குகின்றது. கல்பு விழித்திருக்கின்றது�.
அஷ்ஷிபா, பாகம் - 01, பக்கம் - 90
மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் ஒரு விடயம் தெளிவாகிவிட்டது. நபிகள் நாயக்தின் கழிவுகள் ஏனையவர்களின் கழிவு போன்று அசுத்தமில்லை.
Comments
Post a Comment