நோக்கம்

நோக்கம்

➖➖➖➖




"ஸூபி ஹளறத்" என்ற இந்த இணைய தளம் 20ம் நூற்றாண்டில் தமிழ்கூறும் நல்லுலகில் வழிகேட்டிலிருந்து மக்களைப் பாதுகாப்பதிலும்அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அகீதாவைப் பாதுகாப்பதிலும்,ஷரீஅத்,தரீக்கத்தின் நுட்பமான அதிஉயர் போதனைகளை தனித்து நின்று போதிப்பதிலும் தன்னிகரற்று விளங்கிய,

 காயல்பட்டினத்தில் பிறந்து, இலங்கையின் தலைநகரமான கொழும்பு மாநகரில்உள்ள "குப்பியாவத்தை"மைய்யவாடியில் அடங்கி ஆட்சி புரியும் அல் ஆரிபுல் முஹக்கிக்வல் ஆலிமுல் முதக்கிக் முஹ்யுஸ்ஸுன்னா காமிஉல்பித்ஆ அஷ்ஷாஹ் ஷைகு அப்துல் காதிர் ஸூபி ஸித்தீக்கி,காதிரி காஹிரி நக் ஷபந்தி (ஸூபிஹளறத்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் திருப் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதில்,அன்னாரின் வரலாறுகள், போதனைகள்;கவிதைகள்;நூற்கள்; சேவைகள் ; வழிகாட்டல்கள் ;விவாதங்கள் உள்ளிட்ட வைகள் இடம்பெறும்.

 இன்னும்,அன்னாரின் பாசறையில் வளர்ந்து அன்னாரிடம் பயிற்சி பெற்று அன்னாரின் முழு அன்பிற்கும்,நம்பிக்கைக்கும் பாத்திரமானவரும்,அன்னாரின் மறைவிற்குப் பின்,முழுவீச்சில் அன்னாரின் பணியை ஓய்வில்லாமல் செய்துவருபவருமான,



 கலீபா,மௌலவி,பாஸில்,ஷைய்கு ஏ.எல். பதுறுத்தீன் ஸுபி, ஷர்க்கி,பரேலவி,காதிரி,நக் ஷபந்தி ஸல்லமஹுல்லாஹு வமத்தலில்லஹுல்ஆலி அவர்கள்,


 இதுவரை எழுதிய நூல்கள் ஆக்கங்கள்,ஆய்வுக்கட்டுரைகள், மற்றும்,ஆன்மீக உரைகள்,கேள்வி,பதில்கள், பேட்டிகள் இதில் இடம் பெறும். 


இத்தோடு அகீதா,தப்ஸீர்,ஃபிக்ஹ்,தஸவ்வுப்,வரலாற்றுக் குறிப்புக்கள்,விவாதங்கள்மற்றும் ,தற்காலப் பிரச்சினைகளுக்கான தெளிவுகள் கட்டுரையாகவும்,உரையாகவும் விரிவாக வெளி வரும். 


நமது உயிரிலும் மேலான சன்மார்க்கக்காவலரான ஷைய்குனா ஸூபிஹளறத்கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் கனவை நனவாக்கும் தளமாகவும்,அன்னாரின் பணிக்கு வெளிச்சம் பாய்ச்சும் தீபமாகவும் இன்ஷாஅல்லாஹ் இத்தளம் அமையும்.

 

ஈமானின் மூல வேராகிய கண்மணி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அகமியம், மற்றும் அன்னாரைப்பற்றி இதுவரை தமிழில் வெளிவராத முழுவிளக்கங்களும் தொடராக இன்ஷாஅல்லாஹ் வெளிவரும்.


தரீக்கத்தின் பெயராலும், அகீதா வின் லேபலிலும் உலாவரும் போலிகளின் வேஷமும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும்.


இன்ஷாஅல்லாஹ் இதுவரை வெளிவராத பல நுட்பமான விளக்கங்களையும், தகவல்களையும் தாங்கிய அறிவுக் கருவூலமாக இத்தளம் அமைய வேண்டும் என்பது எமது வேணவா!


 அல்லாஹுத்த ஆலா எமது விருப்பத்தை நிறைவேற்றித்தர அவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றோம். 


இங்கு பதிவிடப்படும் விடயங்களை மக்கள் படித்து , ஈமானைப் பாதுகாத்து, நல்வழிநடந்து இருபதியிலும் ஜெயம்பெற்றவர்களாக ஆக கிருபையுள்ள றஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம். ஆமீன்!

Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை