ஐயமும் தெளிவும்
6746.*முழு வருடமும் முஸீபத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு*
*ரபீஉல் ஆக்ஹிர் 11 அன்று இரவு ஸர்கார் கௌது நாயகம் அவர்களின் 11 திருநாமங்களை 11 பேரீத்தம்பழத்தின் மீது ஓதி ஊதிவிட்டு அந்த இரவிலேயே அதை சாப்பிட்டால் முழு வருடமும் முஸீபத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்* ان شاءاللہ
(தொடக்கத்திலும் இறுதியிலும் 11 முறை ஸலவாத்து ஓதிக்கொள்ளவேண்டும்)
*11 திருநாமங்கள் கீழே தரப்பட்டுள்ளது.*
1- ஸர்கார் ஸய்யித் முஹ்யித்தீன்
*سرکارسید محی الدین*
2- ஸர்கார் ஸுல்தான் முஹ்யித்தீன்
*سرکارسلطان محی الدین*
3- ஸர்கார் குதுபு முஹ்யித்தீன்
*سرکارقطب محی الدین*
4- ஸர்கார் க்ஹாஜா முஹ்யித்தீன்
*سرکارخواجہ محی الدین*
5- ஸர்கார் மக்ஹ்தூம் முஹ்யித்தீன்
*سرکارمخدوم محی الدین*
6- ஸர்கார் வலீ முஹ்யித்தீன்
*سرکارولی محی الدین*
7- ஸர்கார் பாத்ஷாஹ் முஹ்யித்தீன்
*سرکاربادشاہ محی الدین*
8- ஸர்கார் ஷைஹு முஹ்யித்தீன்
*سرکارشیخ محی الدین*
9- ஸர்கார் மௌலானா முஹ்யித்தீன்
*سرکارمولینا محی الدین*
10- ஸர்கார் கௌஸ் முஹ்யித்தீன்
*سرکارغوث محی الدین*
11- ஸர்கார் கஹலீல் முஹ்யித்தீன்
*سرکارخلیل محی الدین*
(رضي الله عنه)
ஆதார நூல் :-
(ஃபதாவா ரஜ்விய்யா, பாகம் 26, பக்கம் 432)
ஐயம்:
++++++
மேற்கண்டவாறான ஒரு பதிவு சமுக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது! இதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தித் தாருங்கள்.
மௌலவி, மில்லத்
,கொழும்பு
தெளிவு:
++++++++
மேற்படி பதிவில் உள்ளபடி பதாலா றிஸ்வியாவில் கிடையாது! கௌதுல் அஃழம் தஸ்தகீர் முஹ்யத்தீன் ஆண்டகை கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் 11 திருநாமங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, இவை தவிர்ந்த விளக்கம் பதிவைப் போட்டவரின் கைவரிசையாகும்.
அஃலா ஹளறத் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறாத பொய்யான தகவலை அன்னாரின் பெயரால் துணிந்து அவர்களின் பத்வா நூலின் பாகம்,பக்கத்தைப் போட்டு அன்னார் மீது களங்கம் கற்பிக்க சில விஷமிகள் செய்த வேலையாகவே இதைக் கருத முடிகின்றது.
பதிவுகள் போடுவோர் தகவலை நிச்சயப் படுத்திய பின்பே பதிவிட வேண்டும் .
கண்டதை ,கேட்டதை ஆராயாமல் தகவலைப் பரப்புவோர் *பொய்யன்* என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
பதாவாறிஸ்வியாவில் உள்ள விளக்கம் இதோ(

Comments
Post a Comment