* மாமறை விளக்கும் மாநபி*! கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள். இறைத் தூதுவர்கள் தமது சத்திய முழக்கத்தை மக்களுக்கு முன்னே, வைத்தபோது அம்மக்கள் அதனை ஏற்கமறுத்து அவர்களை எள்ளி நகையாடினர். அவதூறுகளை அள்ளி வீசினர். அப்பொழுதெல்லாம் பொல்லாங்கு உரைத்த புல்லர்களுக்கு அந்தந்த நபிமார்களே பதிலடிகள் கொடுத்தனர். ஆனால் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கெதிராக அவதூறுகள் கிளப்பிய மக்களுக்கு இறைவனே தன் புறத்திலிருந்து சாட்டையடி கொடுத்தான். அருள்மறையாம் திருமறை அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை கீழே தருகின்றோம். நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூதாயத்தினர் நூஹ் நபியவர்களை நோக்கி நீர் பகிரங்கமான வழிக்கேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம். (அல்குர்ஆன் - 07 : 60) என்று கூறியபோது நபியவர்கள் என்னுடைய மக்களே! நான் எத்தகையே வழிகேட்டிலும் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த ஒரு த...
அகிலத்தின் அருட்கொடை கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் நாமே! உம்மை அகிலங்களின் அருட்கொடையாகவே நாம் அனுப்பியுள்ளோம் (அல்குர்ஆன்) முத்திரை நபியான முத்து முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலங்களின் அருட்பிளம்பாக உள்ளார்கள் என்பதையும், இது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்குரிய தனித்துவமான பண்பு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிவர். ஆலமீன் என்பது மனிதன், ஜின், மலக்குகள் உள்ளிட்ட அல்லாஹ் தவிர உள்ள பிரபஞ்சம் அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு சொல்லாகும். றிஸாலத் என்ற தூதுத்துவத்தின் மூலமே நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலத்தின் அருளாக அருளப்பட்டுள்ளார்கள். அன்னாரின் தூதுத்துவம் - றிஸாலத் - அகிலங்களுக்கு பொதுமையாகவே உள்ளது. அதனை நபியவர்களே படைப்புக்கள் அனைத்திற்கும் பொதுவாக அனுப்பப்பட்டுள்ளேன் (முஸ்லிம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள். றிஸாலத்துவம் எப்படி அனைத்து படைப்புக்களுக்கும் பொதுவானதோ அப்படியே அவர்களின் றஹ்மத்தும் பொதுவானதாகும். றஹ்மத் என்பதற்கு றாஹிம் என்ற பொருள் கொடுத்து நபியே...
Comments
Post a Comment