* மாமறை விளக்கும் மாநபி*! கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள். இறைத் தூதுவர்கள் தமது சத்திய முழக்கத்தை மக்களுக்கு முன்னே, வைத்தபோது அம்மக்கள் அதனை ஏற்கமறுத்து அவர்களை எள்ளி நகையாடினர். அவதூறுகளை அள்ளி வீசினர். அப்பொழுதெல்லாம் பொல்லாங்கு உரைத்த புல்லர்களுக்கு அந்தந்த நபிமார்களே பதிலடிகள் கொடுத்தனர். ஆனால் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கெதிராக அவதூறுகள் கிளப்பிய மக்களுக்கு இறைவனே தன் புறத்திலிருந்து சாட்டையடி கொடுத்தான். அருள்மறையாம் திருமறை அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை கீழே தருகின்றோம். நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூதாயத்தினர் நூஹ் நபியவர்களை நோக்கி நீர் பகிரங்கமான வழிக்கேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம். (அல்குர்ஆன் - 07 : 60) என்று கூறியபோது நபியவர்கள் என்னுடைய மக்களே! நான் எத்தகையே வழிகேட்டிலும் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த ஒரு த...
*திருக்குர்ஆனுக்கு* *அடுத்த* *மதிப்பு மிக்க* *நூல்* ஸஹீஹுல்* புகாரி ஷரீப்!* *ஒரு*கண்ணோட்டம்!* கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இருபது நூற்கள் வரை எழுதியுள்ளார்கள். இவற்றுள் ஸஹீஹுல் புகாரி ஷரீப்மூலமே அவர்களுக்கு மங்காப் புகழ் கிடைத்தது. ஸஹிஹீல் புகாரி ஷரிபுக்கு இமாமவர்கள் இட்ட பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முக்தார் மி்ன் உமூரி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வஸுனனிஹி வஅய்யாமிஹி ஆகும். ஒரு ஹதீஸ் கிதாபிற்கு ஜாமிஉ என்று பெயர் வைப்பதாயின் பின்வரும் எட்டுத் தலைப்புக்குள் ஹதீதுகள் இடம்பெற வேண்டும். அவையாவன. 1. ஈமான் 2. அஹ்காம் (சட்டங்கள்) 3. ஸியர் யுத்தம் 4. தப்ஸீர் 5. ஆதாப் 6. மனாகிப் 7. பிதன், குளப்பம் 8. அஷ்றாத் ஸஆத் - இறுதி நாளின் அடையாளங்கள். புகாரி ஷரீபுக்கு அல்லாஹுத்தஆலா கொடுத்துள்ள கண்ணியத்தைப் போன்று வேறு எந்த ஒரு இஸ்லாமிய நூலுக்கும் இதுவரை அல்லாஹ் வழங்கவில்லை. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஏனைய நூற்களுக்கு...
Comments
Post a Comment